2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்து: இருவர் காயம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

நுவரெலியா, ஹாவா எலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேலியுடன் மோதி  தனியார் பஸ் ஒன்று இன்று (23) மாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் ஹாவா எலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் தரம் 4இல் கல்வி கற்கும் எம்.சுகிர்தன் (வயது 9) என்ற மாணவனும் புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவனை உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .