Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கினிகத்தேனை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகதுலுவ பகுதியில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் பலத்த காயங்களுடன் கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago