2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஆசிரியர் பலி

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, கிராதுகோட்ட, பெலகன்வில வீதி, போகம்பிட்டியவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஆசிரியரொருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல, அட்டம்பிட்டியைச் சேர்ந்த, வீரகோன் வீரசிங்க முதியன்சலாகே (வயது 29) என்பவரே  விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், பெலகன்வில வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிளானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து போகம்பிட்டிய சந்தைக்கு அருகிலுள்ள  மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .