Kogilavani / 2016 மே 03 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை- தம்புள்ளை வீதி, அபகஹமுல பஸ் தரப்பிடத்துக்கு அருகில் திங்கட்கிழமை(2) இரவு இடம்பெற்ற விபத்தில், எஸ்.கிருஷ்ணகுமார் (வயது 56) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவரை கைதுசெய்துள்ளதாகவும் மாத்தளை பொலிஸார் கூறினர்.
மாத்தளையிலிருந்து தம்புள்ளைக்கு பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மேற்படி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி பின்நோக்கி நகர்ந்தால் அதில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் நடைபாதையில் தூக்கிவீசப்பட்டது. இதனால், நடைபாதையில் பயணித்த மேற்படி நபர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026