2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்: பழக்கடை சேதம்

Sudharshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு விபத்துக்களில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பழக்கடையொன்றும் சேதமாகியுள்ளது.

மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி யோகட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி, திங்கட்கிழமை (29) இரவு நோர்வூட், ரொக்வூட் பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிரே வந்த வாகனத்துக்கு, இடமளிக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதென நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற அரை சொகுசு பஸ்ஸொன்று, நேற்று (01) காலை ஹட்டன் நகரிலுள்ள பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரக்கோளாறே இதற்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பழக்கடை சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .