2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் 9பேர் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டனிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், கொழும்பிலிருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த ஒன்பது பேரே இவ்வாறு காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, ஸ்டெதன்- வுட்லண்ட் பகுதியில் இன்று  (09) நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மிகவேகமாக பயணித்த தனியார் பஸ்ஸே, எதிர்திசையிலிருந்து முன்னோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .