2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன், ஸ்டிரதன் பகுதியில் சனிக்கிழமை (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி வந்தக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி வந்த தனியார் பஸ் சாரதியின் கவன குறைவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது என் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த  விபத்து  தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .