2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வெளிநாட்டு பயணிகளுக்கு ஞாபகார்த்தப் பரிசாக தேயிலை

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயணிகளுக்கு, சிறந்த ரக தேயிலைத் தூளை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.   

வெளிநாட்டுப் பயணிகள், தமது தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, சிறந்த தேயிலைத் தூளை அன்பளிப்பாக வழங்க வேண்டுமென அனுமதி கோரி, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை தேயிலைச் சபை, தேயிலை ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிதியில் 100 மில்லியன் ரூபாய் திட்டத்தை பயன்படுத்தி, இதனை செயற்படுத்தவும் யோசனை முன்மொழியப்பட்டது.   

மேலும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கைத் தேயிலையை எவ்வாறு வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரங்கள் அடங்கிய புத்தகத்தையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X