Sudharshini / 2016 மார்ச் 02 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு வரும் விவசாய ஊக்குவிப்பு உதவிகள், நுவரெலியா மாவட்ட சிறு விவசாயிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இவ் உதவிகளை சரியான நேரத்தில் விவசாயிகள் பெற்றுகொள்ள வேண்டும்' எனவும் மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்
'நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் தேவையை உணர்ந்து, உரிய நேரத்தில் சேவையை செய்வதில் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சு முனைப்புடன் செயலாற்றி வருகின்றது' எனவும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு, விதை கிழங்கு வழங்கும் நிகழ்வு, லிந்துலை விவசாய போதனாசிரியர் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை(1) பகல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒரு நிகழ்வுக்கு உரிய நேரத்தில் வருகை தந்து மக்களுடைய தேவைகளையை பூர்த்தி செய்யும்போது, அதனை தக்கநேரத்தில் பெற்றுக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் விதை உள்ள கிழங்கினால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் விலை மற்றும் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரியவருகின்றது. இதனை மாற்றியமைப்பதற்காக மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சு, விதை உருளைக்கிழங்கு உற்பத்தி திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதனடிப்படையில் நுவரெலியாவில் 100 பேருக்கும் கந்தப்பளை மற்றும் லிந்துலை பிரதேச விவசாயிகள் 110 பேருக்கும் முதற்கட்ட சிறுவிவசாய ஊக்குவிப்பு திட்டத்தினூடாக இவ்விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மத்திய மாகாணத்தின் மாத்தளை மற்றும் கண்டியில் பெரிய வெங்காய செய்கையையும்; நுவரெலியா மாவட்டத்தில் கிழங்கு மற்றும் ஏனைய மரக்கறி வகைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்குமாறும்; கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. ஜனாதிபதி இறக்குமதி தீர்வை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்தார். இதற்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இதேவேளை, நாட்டு மக்கள் விரும்பும் வகையில், உள்ளூர் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க ஜனாதிபதி உறுதிக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் மத்திய மாகாண விவசாய திணைக்களம் மற்றும் அமைச்சு ஊடாக வழங்கப்படும் 9 இலட்சம் பெறுமதியான இவ்விதை உருளைக் கிழங்கினூடாக உச்சக்கட்ட பயனை விவசாயிகள் பெறவேண்டும்' என்றார்.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago