Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி - அப்புகஸ்தன்ன தோட்டத்தின் வேவல்கெட்டிய தோட்ட வைத்தியசாலையை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேற்படி வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை குறித்து சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததற்கமையவே மேறப்டி வைத்தியசாலையை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு முதலமைச்சர் மஹிபால ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய, மேற்படி வைத்தியசாலையின் குறைகளை கேட்டறிந்து அதன் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்காக சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் தலைமையிலான சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர, மாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் குமாரகே உட்பட மாகாண சகாதார அமைச்சின் அதிகாரிகள் நேற்று (01) நேரடியாக வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டு, வைத்தியசாலையின் குறைபாடுகளை தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட மக்களிடம் கேட்டறிந்தனர்.
இது குறித்து மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி தோட்டத்தில் சுமார் 2,000க்கும் அதிகமான தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதிலும் அது நீண்ட காலம் அபிவிருத்தி செய்யப்படாத நிலையிலும் வைத்தியர் தாதியர்களின்றி இயங்கி வருவதையும் அவதானிக்க முடிகிறது.
இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி வைத்தியசாலையை முழுமையாக அபிவிருத்தி செய்து, அவ்வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சேவையாளர்கள், ஊழியர்கள், மருந்து வகைகள் மருத்துவ இயந்திர கருவிகள் உட்பட வைத்தியசாலைக்கு தேவையான சகலவற்றையும் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .