2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வங்கி நிதி மோசடி: மூவருக்கு தலா ரூ.3 கோடி அபராதம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கிராமிய அபிவிருத்து வங்கியில் 214 இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்த வங்கியின் முன்னாள் தலைவர், பணிப்பாளர் இருவர் உட்பட மூவருக்கு, 4 வருட சிறைத் தண்டனையும் தலா 3 கோடி ரூபாய் தண்டப்பணமும் விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் லலித் ஏக்கநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 

1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதவி வகித்த மூவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கிராமிய அபிவிருத்தி வங்கியினூடாக விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யும் வியாபாரியிடம் 214 இலட்சம் ரூபாய் மோசடி செய்தார்கள் என குற்றச்சாட்டிலேயே இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .