2026 ஜனவரி 21, புதன்கிழமை

வசந்தகால குப்பைகளை அகற்றல்

Kogilavani   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

பருவகால கொண்டாட்டத்துக்காக நுவரெலியாவுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளால், வீசி எறியப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி, நுவரெலியா பிரதேச சபையினூடாக, நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பட்டிப்பொல பிரதேசத்திலிருந்து பிலக்பூல் பிரதேசம்வரை நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் கண்காணிப்பில் குப்பைகளை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டன.

நுவரெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் பங்கேற்புடன்  சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X