2026 ஜனவரி 21, புதன்கிழமை

வசந்தகாலத்துக்கு வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம்

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

 

நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தக்கால கொண்டாட்டங்களுக்கு வருகை தந்தது தங்கியிருந்த பகுதிகளில் உள்ளவர்கள் பலருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்புக்கு பொறுப்பான பணிப்பாளரும், பிராந்திய தொற்றியல் நிபுனருமான வைத்தியர் மதுர செனிவிரத்தின தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தக்கால கொண்டாட்டங்களுக்கு வருகை தந்த பலருக்கு, அவர்களின் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் நுவரெலியாவில்  தங்கியிருந்த வீடுகள், விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள், ஊழியர்கள் பலர்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில், பலருக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேசங்களில், தற்போதைய நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வந்துள்ள நிலையில், இது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கடும் நடவடிக்கையை ஆரம்பித்து, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பட்டு வருவதாகவும், நுவரெலியா மாவட்டப் பொது சுகாதார பிரிவு பணிப்பாளர் ஜயவீர கமகே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X