Sudharshini / 2016 மார்ச் 07 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வாஜா
வடக்கு, கிழக்கு ஆசிரியர்களை அழைத்து வராமைக்கு, புலிப் பயமே காரணமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
'இராஜாங்க கல்வி அமைச்சர்; இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு அரசியல் மற்றும் தொழிற்சங்கம் தொடர்பில் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு வழங்கப்பட்ட சேவைகளை அவர் முறையாக மக்களுக்கு செய்தாலே போதுமானது' என இ.தொ.காவின் துணைத் தலைவர் டி.வி. சென்னன் தெரிவித்தார்.
இ.தொ.கா.வின் பதுளைப் பணிமனையில் நேற்று (06) நடைபெற்ற மகளிர் தின முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை மலையகப் பாடசாலைகளுக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது என்பதை யாரும் மறந்து விட முடியாது. அக்காலப் பகுதியில் வடக்கு, கிழக்கிலிருந்து ஆசிரியர்களை மலையகத்துக்கு அழைத்து வந்தால், புலிகளும் மலையகத்துக்குள் ஊடுருவதற்கான வாய்ப்புகள் உள்ளதென பேரினவாதிகள் பிரச்சினைகளை எழுப்பினர். அதனாலே, எமது முயற்சி கைவிடப்பட்டது' என்றார்.
'தற்போதைய நிலையில், கல்வி இராஜாங்க அமைச்சர், எமது சமூக ஆசிரியர்களை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துகின்றார். ஆசிரியர்களை அரசியலில் ஈடுபடுத்துவது முறையானதல்ல. அவர்களின் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் முன்னெடுப்பதற்கான சூழலை தோற்றுவிக்க வேண்டும்' என தெரிவித்தார்.
'கடந்த அரசாங்கத்தில்; 3,021 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையினால் நியமனங்களை எம்மால் வழங்க முடியவில்லை. புதிய ஆட்சியில் அந்நியமனங்களை வழங்குதலிலும் பல்வேறு குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் முழுமையாக உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்க முடியாத சூழலே காணப்படுகின்றது' என்றார் 'ஆட்சி மாற்றம் ஏற்படாமல் இருக்குமேயானால், முழுமையாக உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கும். மேலும், அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை எம்மால் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால், எதுவுமே, புதிய ஆட்சியில் முறையாக இடம்பெறவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றமே என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
புதிய ஆட்சியில், அமைச்சர்களாக இருப்போர், எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து, கவர்ச்சிகரமாக பேசுவதில், சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை' என்றார்.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago