2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வத்தேகம மீன் வியாபாரி கொலை: மூவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வத்தேகம மீன் வியாபாரியின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் திங்கட்கிழமை (13) கைது செய்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாத்தறை, டிக்வெல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களிடமிருந்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கூர்மையான ஆயுதங்களும், ரூ.370,000 பணமும் கைப்பற்றப்பட்டன.

வத்தேகம நகரில் இரண்டு மீன் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜனவரி 3 ஆம் திகதி அவரது வீட்டின் முன் இந்தக் கொலை நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் வசந்த சஞ்சீவ என்ற 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X