Kogilavani / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை உக்குவெல, திப்பட்டுமுல்ல பிரதேசத்தில், வயற் காணிகள் தாழிறங்கியுள்ளன என்று, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மாத்தளை காரியாலய பிரதானி சமிந்தர மொரேமொட தெரிவித்தார்.
உக்குவளை பிரதேச செயலகம், கிராமவாசிகள் வழங்கியத் தகவலுக்கு அமைய, தாழிறங்கியப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்தப் பகுதிகளில் சுண்ணாம்புக் கற்கள் இருந்தமை முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களிலும் மேற்படிப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவு;ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிழம் தாழிறங்குவதால், வீடுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கோ, ஏனையக் கட்டடங்களுக்கோ பாதிப்புகள் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதேசச் செயலாளர் என்.கே.சேரசிங்க தெரிவித்தார்.

15 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 Jan 2026
21 Jan 2026