Niroshini / 2016 ஜூலை 22 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
தீ விபத்துக்களின்போது ஆபத்துக்களை குறைத்துகொள்ளும் வகையில், நகர்புரங்களில் அமைக்கப்படும் வர்த்தக நிலைய கட்டிடங்களுக்கிடையில் பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என நகரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஹட்டன் நகரில் பாதுகாப்பு இடைவெளியின்றி வர்த்தக நிலைய கட்டிடங்கள் பல அமைக்கப்படுவதாக அப்பகுதி வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர.
இவ்வாறான செயற்பட்டால் தீ பரவும் அபாயம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன்-டன்பார் பகுதியில் புதிகாக அமைக்கப்படும் வர்த்தக நிலையத்திலும் இவ்வாறு பாதுகாப்பு இடைவெளியின்றியே கட்டட நிர்மாணப்பணிகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், ஹட்டன் நகர சபை அதிகரிகளிடம் கேட்டபோது, நகரப் பகுதிகளில் பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே வர்த்தக நிலைய கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்ட முறைபாடு தொடர்பில் கவனத்திலெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago