Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'செலுத்தப்படவேண்டிய வரிகளை உரியவர்கள், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக, செலுத்தினால் 10 சதவீதம் கழிவு வழங்கப்படும்' என நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை 'வருடத்தில் 4 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படும் வரிகளுக்கு 5 சதவீதம் கழிவு வழங்கப்படும்' என்றும் கூறினர்.
வரிப்பணத்தைச் செலுத்த தவறும் பட்சத்தில் நிலவரிக்கென தண்டப்பணமாக 15 சதவீதமும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டப்பணமாக 20 சதவீதமும் அறவிடப்படும் என வரிசேகரிப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபை எல்லைக்குள் வறுமையை எதிர்நோக்கும் வரியாளர்கள், தமது வறுமை தொடர்பாக கிராமசேவகர் மற்றும் அரசாங்க செயலாளர் ஊடாக உறுதிசெய்யப்பட்ட கடிதமொன்றை பிரதேச சபையில் சமர்பிக்கும பட்சத்தில், அவர்களுக்கான வரி நிராகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேச சபை வருடமொன்றுக்கு 40 இலட்சம் ரூபாயை வரிப்பணமாக பெறுவதாகவும் இதில் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள 457 நில சுற்றளவு கொண்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்ற வருடந்தோறும் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் மிகுதி தொகையில் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதேச சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட வருமான வரிசேகரிப்பு மாதத்தில் நுவரெலியா பிரதேச சபைக்கு நிலுவையில் இருந்த 70 இலட்சம் ரூபாவில் 57 இலட்சம் வரிபணமாக பெறப்பட்டுள்ளது.
இந்த வரிப்பணம் சேகரிப்பு நடமாடும் சேவையின் ஊடாக 8 குழுக்களை அமைத்து திரட்டப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago