2026 மே 14, வியாழக்கிழமை

dd

’வருமுன் காப்பதே சிறந்தது’

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பின்னர், பாதிப்படைந்தவர்கள் குறித்து கவனம் செலுத்துவதை விடுத்து, அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தால், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்எ ன, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரனகமைக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடித்தின் பிரதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பெருந்தோட்ட கைத்​தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண, பதுளை மாவட்ட அனைத்து பிரதேச ​செயலாளர்கள் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடித்தில், பதுளை மாவட்டத்தில் தற்போது அடிக்கடி அனர்த்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் எனினும் இதிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருகின்றனர் என்றும் இதனால் மக்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்பொன்று இடம்பெற்ற பின்னர், பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களிலோ பாடசாலைகளியோ தங்கவைப்பது மாத்திரம் நிரந்தரத் தீர்வாகிவிடாது என்றும் பாதிப்புகளுக்கு பயந்து, சொந்த வீடுகளை விட்டு, முகாம்களில் குடியேறுவதும் ஒரு அனர்த்தமேயாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்து உரிய அவதானம் செலுத்தி, தோட்டத் தொழிலாளர்களின் குடியிறுப்புக்கு அருகில் உள்ள பாரிய மரங்கள், கற்பாறைகளை அகற்றுவதற்கு, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .