2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

வலையில் சிக்கிய சிறுத்தை மீட்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை லிந்துலை டில்குல்றி தோட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை (27) அன்று ஒரு கம்பி வலையில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலையில் சிக்கிய ஒரு பெரிய, நன்கு வளர்ந்த சிறுத்தையொன்றை  தோட்டத் தொழிலாளர்கள் கண்டு இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் யாரோ ஒருவரால் கம்பி வலை அமைக்கப்பட்டதாகவும், இரவில் வந்த சிறுத்தை அதில் சிக்கியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வலையில் சிக்கிய சிறுத்தையின்  உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .