டி. ஷங்கீதன் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்களின் கல்வியில், ஆரம்பக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாலர் பாடசாலைகளிலேயே அனைத்து இனம், மதம், மொழி சார்ந்த சிறுவர்கள் ஒன்றாகக் கல்வி பயில்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் நாட்டைப் பொறுத்தளவில், பாலர் பாடசாலைகளிலும், ஆரம்பக் கல்வியிலும் அதிக கவனம் செலுத்தி, வளர்ச்சி அடைந்த நாடுகளின் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கந்தப்பளை பாலர் பாடசாலையின் (ரோயல் கிங்ஸ்வே) வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில், நேற்று (2) நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
“பாலர் பாடசாலைகள் சரியாக இயங்குமாக இருந்தால், இந்த நாட்டில் இன, மத, மொழி பேதமில்லாமல், அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளைப் போல வாழ முடியும்” என்றார்.
வெளிநாடுகளைப் பொறுத்த அளவில், அவர்களுடைய கல்விக்கொள்கை மிகவும் சிறப்பாக உள்ளதென்றும் அதன் காரணமாக, இன்று அந்த நாடுகள் மிகுந்த வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிள்ளைகளின் மனதில், சிறு வயதில் இருந்தே நல்ல எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும். அதற்குத் தகுந்த இடம், பாடசாலைகளே. குறிப்பாக பாலர் பாடசாலைகளில் அவர்களுக்கு மூன்று மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இது அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாகுவதற்கு வழிசமைக்கும்” என்று தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும் ஆரம்ப கல்விக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எனவே அரசாங்கமும் எதிர்காலத்தில் பாலர் பாடசாலைகள் தொடர்பாகவும் அங்கே கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அந்த ஆசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்” என்றார்.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago