2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

வங்கிகள் மற்றும் நகையகங்களிலிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்து வருவோரிடமிருந்து, பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் கும்பலில் இருவரை நேற்று (20) ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

பணம் மற்றும் ஆபரங்களுடன் வருபவர்களை இனங்கண்டு அவர்களிம் அன்பாக பேசி தங்களது முச்சக்கரவண்டிகளில் ஏற்றிச்சென்று, வழியில் அவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களைக் கொடுத்து மயக்கமடைய செய்து அவர்களிடமிருக்கும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் செல்லும் குழு தொடர்பாக நான்கு முறைபாடுகள் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

இம்முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார், சந்தேகநபர்களை தேடி வந்தனர். இந்நிலையிலே சந்தேகத்தின் அடிப்படையில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதோடு முச்சசக்கரவண்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 மேலதிக விசாணைகளின் பின் சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .