Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தின் வழிப்பிள்ளையார் ஆலயத்தில், இரும்புக் கம்பியால் பொருத்தப்பட்டிருந்தக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், இன்று (31) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்று, தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில், பிரதேசவாசிகளால், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்தில், மூன்றாவது தடவையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .