Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
கடும் மழை காரணமாக, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவு, விமலசுரேஸ்திர பகுதியிலுள்ள வீதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆகையால், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வீதியை சீர்திருத்தும் பணியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மலையகத்தில் பெய்கின்ற கடும் மழை காரணமாக, இரத்தினபுரி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கையை, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.
இதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் கண்டி மாவட்டத்தில் உடதும்பறை மற்றும் மெதத்தும்பறை ஆகிய பிரதேச செயலகங்களிலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வாழும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தளை மாவட்டத்தில் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மண் சரிவு அபாயம் உள்ளதால், அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago