Janu / 2026 மார்ச் 26 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊராபொல - ருவன்வெல்ல வீதியின் சப்புகஸ்தென்ன, லிஹினியாகொல்ல பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சப்புகஸ்தென்ன, நிஹெட்டிகந்த முகவரியில் வசிக்கும் முச்சக்கரவண்டியின் சாரதியான 30 வயதுடைய ஒகதவத்த ஹேவகே திலிண மதுஷான் அபேரத்ன மற்றும் அவரது தாயாரான 58 வயதுடைய நாபயலாகே சுமித்ரா ரத்னாவதி என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஊராபொல திசையிலிருந்து ருவன்வெல்ல நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி தூக்கியெறியப்பட்டு தலைகீழாக புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago