2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாகனத்துடன் ஒருவர் தலைமறைவு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஷேஹ்ன் செனவிரத்ன

கண்டியில் உள்ள பிரதான கார் வாடகை நிறுவனம் ஒன்றிலிருந்து, சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனத்தை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர், வாகனத்துடன் காணாமல் போயுள்ளமைத் தொடர்பில் கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி நகரில் உள்ள பொருள் விநியோக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர், கடந்த 29ஆம் திகதி வாகன வாடகை நிறுவனத்துக்குச் சென்று, இம்மாதம் 1ஆம் திகதி வாகனத்தை மீள வழங்குவதாகத் தெரிவித்து, வாகனத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.

ஆனால் உரிய திகதியில்  வாகனம் திருப்பிக் கொடுக்கப்படாததால், வாடகை கார் நிறுவனத்தின் உரிமையாளரால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தனது ஆடைகள் மற்றும் பெறுமதியான ஆவணங்களுடன் அந்த வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர் பணிபுரிந்த பொருட்கள் விநியோக நிறுவனம் வழங்கிய 450,000 ரூபா பெறுமதியான பொருட்களை தெஹியத்தகண்டிய பிரதேசத்திற்கு வாடகை வாகனத்தில் எடுத்துச் சென்று உரிய நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும், பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது அலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை தனது கணவன் காணாமல் போனமை தொடர்பில் அவரது மனைவி கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு, அவர் பணிபுரிந்த பொருட்கள் விநியோக நிறுவனத்தின் நிர்வாகமும் தமது நிறுவனத்திற்கு 450,000 ரூபாய் கிடைக்காதமை தொடர்பில் கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X