2026 ஜனவரி 21, புதன்கிழமை

வாரத்துக்கு இரு நாட்கள் மட்டுமே தொழில்; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ,
கெம்பியன், லொய்னோன், பொகவான, கொட்டியாகலை, பெற்றோசோ, ஆகிய
தோட்டப் பகுதிகளில், வாரத்துக்கு இரண்டு நாள்கள் மாத்திரம் தொழில்
வழங்கப்படுவதாகத் தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ கெம்பியன் முத்துலெச்சுமி தோட்டப் பகுதியில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கமானது ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, தொழிலாளர்களுக்கு பெற்றுக்
கொடுத்தாலும் நாளாந்தம் தொழிலாளர்கள் பறிக்கும் பச்சை தேயிலை கொழுந்தின்
அளவில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கி எம்மை ஏமாற்றுகிறதா அல்லது தொழிற்சங்கம் ஏமாற்றுகிறதா என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “நாளொன்றுக்கு 14 கிலோகிராம் தேயிலை கொழுந்து மாத்திரமே பறித்துவந்தோம். தோட்ட நிர்வாகம் 18 தொடக்கம் 20 கிலோகிராம் வரை தேயிலை கொழுந்தை பறிக்குமாறு
வழியுறுத்தி வருகிறது. எம்மால் தோட்ட நிர்வாகம் கோரும் அளவை பறிக்கமுடியாது. தேயிலைத் தோட்டங்கள் கடுகளாகியுள்ளன.

இவ்வாறு இருக்கின்றபோது நாம் எவ்வாறு அதிகமான தேயிலை
கொழுந்தைப் பறிக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X