Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
அம்பகமுவ, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளில் 39 வருடங்களாக குப்பை சேகரிக்கும் உழவு இயந்திரத்தின் சாரதியாக கடமையாற்றிய கனகரத்தினம் என்பவர், தனது உழவு இயந்திரத்தை வணங்கி அதன் சாவியை நோர்வூட் பிரதேச சபையின் செயலாளரிடம் கையளித்தார்.
நோர்வூட்- பொகவந்தலாவை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட , மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த சாரதி, அம்பகமுவ பிரதேச சபையில் 39 வருடங்களாக உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பிரதசசபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், மஸ்கெலியா பிரதேச சபையில் சிறிது காலமும் நோர்வூட் பிரதேச சபையில் சில காலமும் உழவு இயந்திர சாரதியாக பணிபுரிந்து தற்போது ஓய்வுபெறுகிறார்.
39 வருடங்களாக உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றிய இவர் இதுவரை வாகன விபத்தையோ, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளையோ எதிர்கொள்ளாதவர் என தெரியவந்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago