2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

விநியோக பாதிப்பால் விரயமாகும் மரக்கறிகள்

R.Maheshwary   / 2022 ஜூலை 18 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

எரிபொருள் நெருக்கடியால் மரக்கறிகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தேசிய சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு மரக்கறிகளை விநியோகிப்பதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் தற்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதால் மரக்கறிகள் பழுதடைந்து விரயமாவதாகவும் தெரிவித்தார்.

தற்போது உள்நாட்டு சந்தைகளில்  காய்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 1200 ரூபாய்க்கும் உள்ளூர் உருளைக்கிழங்கு 550 ரூபாய்க்கும் மாலுமிரிஸ்- 850 ரூபாய்க்கும் போஞ்ச்- 500, கெரட்- 400 ரூபாய், தக்காளி- 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X