2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். கே.குமார்

நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப்  பகுதியில் இன்று ( 26) ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்.

பதுளை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேனொன்று, நுவரெலியா -கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் ஸ்ட்ராபெரி  பண்ணைக்கு அருகில் உள்ள  சிறு வீதியில் இருந்து பிரதான வீதியினை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில்  பயணித்த இருவர், 1990 நோயாளர் காவு வண்டி மூலம்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் படுகாயம் அடைந்த ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதையடுத்து வேன் சாரதி கைது செய்யப்பட்டதுடன், அவரை நாளை திங்கட்கிழமை நுவரெலியா  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .