2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் பலி; மூவர் காயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா,  ஆர்.ரமேஸ், மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

லிந்துலை பொலிஸ் பிரிவு- ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதி, லோகி தோட்டத்துக்கு முன்பாக சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் நாகசேனையிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வித்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் ஆப்பத்தான நிலையில் லிந்துலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை காலமழை தோட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் சதிஸ் (வயது 15), சந்திரன் பிரபு (23) ஆகிய இருவருமே, விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .