Kogilavani / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரியகாந்தி சந்திக்கு அருகில், சனிக்கிழமை(10) மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
உடப்புஸ்ஸலாவை ரப்பானக் பகுதியைச் சேர்ந்த வி.எம்.கே தேவிகா (வயது 47) என்பவரே, விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உடப்புஸ்ஸலாவை இரப்பானப் பகுதியிலிருந்து இராகலை வழியாக சூரியகாந்திக்குப் பயணித்த ஓட்டோவொன்று, பிரதான வீதியை விட்டுவிலகி சுமார் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐவர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் ஐவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அதில் பயணித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விபத்துத் தொடர்பில், இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago