Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள், மந்தகதியில் இடம்பெறுவதாக கூறினோமே தவிர, அதை, நாம் விமர்சிக்கவில்லை என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சருமான எஸ். அருள்சாமி கூறியுள்ளார்.
“மாடி லயம் அமைத்தவர்கள், தனிவீட்டுத் திட்டம் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்” என்று, மலையக அமைச்சர் ஒருவரின் இணைப்புப் பேச்சாளர் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் முகமாக, இன்று (31) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மலையக மக்களின் நன்மை கருதி, அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு, எவர் முன்வந்தாலும், அதனை யார் செய்தாலும், எதைச் செய்தாலும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே, இ.தொ.காவின் நிலைப்பாடு ஆகும். ஒரு விடயத்தை நன்கு ஆராய்ந்து, அதற்கான பரிகாரத்தை வழங்குவதோ அல்லது அறிக்கைகளை வெளியிடுவதோ, ஒரு அமைப்பின் பொறுப்பாளரின் பணியாகும் என்பதை, அறிக்கைளை வெளியிடுவோர் புரிந்துக்கொள்ள வேண்டும்.
“அவ்வாறு இல்லாமல், தான்தோன்றித்தனமான அறிக்கைகள், வாதங்கள், பிரதிவாதங்கள் என்பன, எவ்வித்திலும் பொறுப்பு வாய்ந்த இணைப்புச் செயலாளருக்கு பொருந்தாது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 38 ஆண்டுகளாக, மலையக மக்கள், நாடற்றவர்களாக உரிமையற்றவர்களாக, வீடற்றவர்களாக வாழ்ந்த சமயத்தில், இ.தொ.காவே, இந்த மக்களை அரவணைத்து பாதுகாத்தது. இந்த மக்களுக்கு உரிமை வேண்டுமென்பதற்காக, 1983ஆம் ஆண்டு, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், நாடாளுமன்றத்தில், ஒரு விஷேட பிரேரணையைக் கொண்டு வந்ததன் மூலம், மலையக மக்கள், இந்த நாட்டு பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
“எனவேதான், இன்று, நாடாளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும், பிரதேசசபைகளிலும், அரச நிறுவனங்களிலும் பதவிவகிப்பதும், அமைச்சர்களாக உலாவருவதும், அன்று அமரர் தொண்டமான் பெற்றுக் கொடுத்த வரப்பிரசாதங்களினாலேயாகும். இத்தகையதொரு நிலையில், 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதாயின், நாளொன்றுக்கு 70 வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே கணக்காகும். ஆனால், இந்தத் திட்டம் மந்த கதியிலே நகருகின்றது என்று கூறினோமே தவிர, திட்டமிட்டு, வீடமைப்பு திட்டத்தை குழப்பியடிப்பதற்காக அல்ல.
“2020ஆம் ஆண்டுக்கு முன்னர், 50 ஆயிரம் வீடுகளை அமைத்து முடிப்பதாக, அமைச்சரின் இணையத்தள செவ்வியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், எமது கணக்குப்படி, தற்போதைய நிலையில் 1,763 வீடுகளையே பார்க்க முடிகிறது. இன்னும், இரண்டரை வருடங்களில் அது எப்படி சாத்தியப்படும் என்பதை, நாம் அவரிடம் வினா தொடுகின்றோம்” என்று இதன்போது அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .