Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்தில் (69) வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனி வீடு ஒன்றின் சமையலறையில் இருந்து வெட்டு காயங்களுடன் தாய், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வௌ்ளிக்கிழமை (21) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள தாய் அக்கரப்பத்தனை சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த கடந்த சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் மருமகனின் வீட்டுக்கு ஞாயிற்றுகிழமை (16) விருந்தாளியாக வந்திருந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், படுகொலைச் செய்ததன் பின்னர் நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மருமகன்,மகள்,பிள்ளைகள் இருவர் வசிக்கும் இந்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் தாய் தனியாக இருந்துள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தாயின் காது, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் அந்த வீட்டைச் சேர்ந்த சிறுமி, வெள்ளிக்கிழமை (21)காலை தண்ணீர் பருக வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது ஆச்சி கிடந்ததை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அயலவர்கள் சம்பவத்தை அறிந்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து விரைந்த பொலிஸார், வெட்டு காயங்களுடன் அந்த தாய் சடலமாக கிடந்ததை கண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்த பொலிஸார் நீதவானின் விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர தலைமையில் குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
37 minute ago
48 minute ago
2 hours ago