Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சரணாலயங்கள், வனப்பகுதிகளில் வசித்துவரும் விலங்குகள், பிராணிகள், பறவையினங்கள், ஊர்வன போன்றவை, சரியான பாதுகாப்பு இன்மையால், வழிதவறி செல்வதாகவும் அவற்றில பல உயிரிழந்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்ட விவசாய இணைப்புக் குழுக்கூட்டம், நேற்று (16) நடைபெற்றபோதே, அது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்பிரகாரம், உடவளவை, சமனலவெவ உள்ளிட்ட ஏனைய வனப்பகுதிகளில் வழிதவறி வந்த 24 விலங்குகளை, மாவட்ட வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, இந்த விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், சிறுத்தை, மான்கள், பன்றிகள், கழுகுகள், மாலைப்பாம்புகள், நாகப்பாம்புகள், குரங்குகள், காட்டுக்கோழிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் இவற்றுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு, அவற்றில் 19 உயிரினங்கள், உடவளவ சரணாலயத்துக்குள் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago