2026 ஜனவரி 21, புதன்கிழமை

விளக்கமறியல் கைதி மரணம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை சிறைச்சாலையில், தன்னுயிரை மாயத்துக்கொள்ள முயன்ற நிலையில் மீட்கப்பட்டு, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விளக்கமறியல் கைதி, இன்று (6) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோய்ன் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X