2025 மே 07, புதன்கிழமை

விளைபொருள்களை கொள்ளையடிப்படிதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Gavitha   / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தை ஒரு காரணமாகக் கொண்டு, சில ஒழுங்கற்ற வர்த்தகர்கள், தங்களது விளைப்பொருள்களைக் கொள்ளையடித்து வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொரக்காய், மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றுக்கு, தற்போது முறையான விலை இல்லை என்று, குறைந்த விலையில் தங்களிடம் பொருள்களைப் பெற்று, அதிகளவில் விற்பனை செய்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து தற்போது யாரும் வருகை தராதமையால், இவற்றை யாரும் கொள்வனவு செய்வதில்லை என்றும் ஆனால், மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தே, இந்த வர்த்தகர்கள மசாலா பொருள்களைக் கொள்வனவு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X