Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
“நவீன தொலைத்தொடர்பு சாதனங்களைத் தமது பொழுது போக்குக்காக அதிகமாகப் பயன்படுத்துகின்ற இளைஞர்கள், தமது உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்கின்ற விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா வனராஜா மேற்பிரிவில், பட்டர்பிளை விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,
“கிரிக்கெட், கரப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். தோட்டப்பகுதிகளில் இயங்குகின்ற விளையாட்டுக் கழகங்கள் இவ்விடயம் தொடர்பில் இளைஞர்களை ஒன்றிணைப்பதற்கு முனைப்புடன் செயற்படுகின்ற பட்சத்தில், எனது உதவி நிச்சயமாக கிடைக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago