2026 மே 07, வியாழக்கிழமை

விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 எம்.ஏ.எம்.ஹசனார்

பதுளை, மொனராகலை வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, கொரோனா வைரஸின் தாக்கம், தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவருவதுடன், துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கே, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், நோயாளர்களுக்கு முகக்கவசங்களும்  இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் மார்ச் மாதம் முதல் இன்று வரையான காலப் பகுதிக்குள், இத்தாலி, ஐரோபிய நாடுகள், கொரியா, அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்திருப்பவர்கள், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகிலுள்ள வைத்தியாசாலைக்கோ சென்று, தம்மைப் பதிவு செய்துகொள்ளமாறு  பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை, ஹப்புத்தளைப் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவித்தல் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .