Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பெருந்தோட்ட மக்களை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்துப் பாதுகாக்கும் நோக்கில், பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், விசேட படையணி அமைத்து விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக, நிதியத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக விசேட வைத்தியர்களை நியமித்துள்ளதோடு, கொரோனா வைரஸ் தொடர்பான தெளிவூட்டல்களையும் அதேபோல ஏதும் பொருள்கள் தேவை ஏற்படின் அதனையும் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கண்டி பகுதிக்கு டொக்டர் கல்யாணி (077-5728552), நுவரெலியா பகுதிக்கு க்ரிஷானி (075-7634956), ஹட்டன் பகுதிக்கு ப்ரமோத் (077-3411513), பதுளை பகுதிக்கு சத்சரா (071-2612008), இரத்தினபுரி பகுதிக்கு கோசலா (071-8487471) காலி பகுதிக்கு மனோஹரி (077-3452909) ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சமூக நலன்புரி அதிகாரிகள், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைவாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago