2026 ஜனவரி 21, புதன்கிழமை

வீடு திரும்பாதவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2021 மே 04 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன நபர், இன்று (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆட்லோ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே (வயது 84) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பத்தனையிலுள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்ற குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி அங்கிருந்து சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டுக்கு அமைய தேடுதலை மேற்கொண்ட பொலிஸார், அக்கரப்பத்தனையிலுள்ள மலையிலிருந்து அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X