Kogilavani / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஷ்ணா, எஸ்.சதிஷ்
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள், இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அரசியல் என்பது மக்களுக்கானது என்றும் எனவே, எந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால், மக்களுக்கான சேவைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
நல்லாட்சி அரசாங்கத்தில்இ தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த பழனி திகாம்பரம் தலைமையில்இ 2018 ஒக்டோபர் 7ஆம் திகதி பிரவுன்ஸ்வீக், குயின்ஸ்லேன்ட் பிரிவில் 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதாகச் சுட்டிக்காட்டினர்.
அதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகின என்றும் 9 வீடுகளுக்கு பகுதியளவு சுவர்கள் அமைக்கப்பட்டன என்றும் தெரிவித்ததுடன், ஆட்சி மாற்றத்தால் ஒப்பந்தக்காரர்களால் வீட்டுத் திட்டம் அவ்வாறே கைவிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் 'ட்ரஸ்ட்' நிறுவனத்திடம் பல தடவைகள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் பயனாளிகள் தெரிவித்தனர்.
தற்போது கட்டுமானம் இடம்பெற்றுள்ள பகுதி காடாகி வருவதாகவும் இந்நிலையிலேயே வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.



19 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 Jan 2026
21 Jan 2026