2025 மே 19, திங்கட்கிழமை

வெடி பொருட்களுடன் இளைஞர் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெந்தகொள பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரும் பதுளை விஷேட பொலிஸ் பிரிவினரும் இனைந்து சந்தேகநபரின்  வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் 5,  ஜெலட்டின் குச்சிகள் 3, , 6 மீற்றர் வயரும் அமோனியம் 2 கிலோ 630 கிராமும் வெடிமருந்து 967 கிராமும் கஞ்சா போதைப் பொருள் 10 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 29 வயதுடையவர் என தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X