2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வெலிகல்லயில் கோர விபத்து - தாய், மகன் பலி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை -  கண்டி வீதியில் வெலிகல்ல பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு மகன் படுகாயமடைந்துள்ளார்.

கம்பளை துன்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான 4 பிள்ளைகளின் தாயும், அவரது 26 வயதான மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 11 வயதான இளைய மகன், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடுள்ளார்.

தாயும்  இரு மகன்களும் முச்சக்கர வண்டியில் கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, குருநாகலையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.

வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய, பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .