Kogilavani / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
வெலிமடைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று (18) வெளியானபோதே, 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக குருத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையின் அதிபருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் அதே பகுதியில் மேலும் ஐவருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெலிமடையில் இருவருக்கும் பொரகஸ் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பாக பொதுசுகாதார பரிசோதகர் சுப்ரமணியம் மணிவண்ணன் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 minute ago
15 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
45 minute ago