Freelancer / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில் ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (K)
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026