Kogilavani / 2021 மே 11 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வெள்ளம் அபாயம் தொடர்பில் முன்கூட்டியே அறிந்துக்கொள்வதற்கான கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கருவிகளினூடாக, களுகங்கை உட்பட அதன் கிளை ஆறுகளின் நீர் அளவை 24 மணித்தியாலங்களும் அறிந்துகொள்ள முடியுமான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்டப் பொறுப்பாளர் அனுர சமரதுங்க தெரிவித்தார்.
சப்ரகமுவ மா காணசபை, இரத்தினபுரி மாவட்டச் செயலகம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம், நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இணைந்தே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைவாக பிரதான நகரங்களை அண்மித்து அமைந்துள்ள கங்கைகளில் குறித்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இக்கருவிகள் களுகங்கை (இரத்தினபுரி), வேகங்கை (காவத்தை), குருகங்கை (குருவிட்ட), குகுலேகங்கை (கலவான), நிரிஎல்ல கங்கை (எலபாத்த), தெனவககங்கை (பெல்மதுளை), கலதுர கங்கை (அயகம) ஆகிய நகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
வருடத்தில் இரண்டுமுறை வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்கும் இரத்தினபுரி மாவட்ட மக்கள், இதன்மூலம் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் இக்கருவிகள் காட்டும் நீர்மட்ட அறிவுறுத்தல்களை www.river net.lk இணையத்தளத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கருவிகளின் 7.5 மீற்றர் மட்டத்தில் சிறிய அளவிலான வெள்ள அபாயத்தையும் 9.5 மீற்றர் மட்டத்தில் அபாயகரமான வெள்ள நிலைமையையும் 10.5 மீற்றர் மட்டத்தில் எல்லை மீறிய வெள்ள நிலைமையையும் காணப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago