2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வேதனைகளை சாதனைகளாக மாற்றிய மாணவர்கள்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டினுடைய எதிர்கால வளர்ச்சியின் ஆக்கப்பூர்வமான ஆரம்பமே என  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல இன்னல்களை கடந்து  மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வேதனைகளை சாதனைகளாக மாற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இன்று வெற்றி என்னும் கனியை சுவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் 

க.பொ.த.உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியாகவும் மலையகத்திலும் இம்முறை பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் மலையக மாணவர்கள் கல்வியில் முன்னிலையில்  திகழ்கின்றார்கள் இது வரவேற்கத்தக்க விடயமாகும் 

வளமான மலையகத்தின் ஆரம்பப்புள்ளி இதுவாகும்.

 புள்ளி விபரங்களின் அடிப்படையில் 62.9 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை நாட்டினுடைய எதிர்கால வளர்ச்சியின் ஆக்கப்பூர்வமான ஆரம்பமாகும்.இதற்கு  காரணமாக இருந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் 

சித்தியடைந்த மாணவர்களை போன்று சித்தியடையாத மாணவர்களும் துவண்டு விடாது தோல்வியே வெற்றியின் ஆரம்பப்புள்ளி என்பதை நினைவில் நிறுத்தி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X