Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் 2022 முதல் 2025 ஆம் ஆண்டுவரையிலான புதிய அபிவிருத்தி குழு சுகாதார அமைச்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழு நிர்வாக சபையினருக்கான நியமன கடிதங்கள் உத்தியோகபூர்வமாக இன்று (4) வழங்கப்பட்டன.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் வைத்தியர் மகேந்திர செனிவிரட்ன மற்றும் பிரதி இயக்குனர் திருமதி பாமினி நவரட்னம் ஆகியோரால் இந்த நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்குழுவின் தலைவராக பி. மகேஸ்வரன் ( முன்னாள் நுவரெலியா ரோட்டரிக் கழக தலைவர் ) செயலாளர் பிரியன்த (வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்) பொருளாளர் என். நெடுமாறன், ( முன்னாள் நுவரெலியா லயன்ஸ் கழக தலைவர்) உப தலைவர் ஜி.அப்துல் ரஹிம், இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் சஹீர்ஹுசைன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
செயற்குழு உறுப்பினர்களாக எல். ஜி. மஹிந்த சில்வா ( நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்) அஎ. எம். பளீல் (முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்) சமீந்த கொடிக்கார, நீலியன் யோகேன் உட்பட 21 உறுப்பினர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025