R.Maheshwary / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹக்கல பகுதியில் நேற்று இரவு (4) இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மூவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலனறுவை பகுதியிலிருந்து வெளிமடை நகருக்கு அரிசி ஏற்றி வந்த பாரஊர்தி, பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரஊர்தி வேக கட்டுப்பாட்டை இழந்தைமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதனால் வீடு ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாரஊர்தியின் சாரதி, நடத்துனருடன் உதவியால் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago